Sangathy
LatestSports

ஜோ ரூட் அவுட்: தொழில்நுட்பத்தை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது : வாகன்

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

“தொழில்நுட்பத்தை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. பந்து பாதிக்கு மேல் லெக்ஸ்டம்புக்கு வெளியே இருப்பது தெரிந்தது. ஆனாலும் சிவப்பு லைட் ஒளிர்கிறது. எல்.பி.டபிள்யூ.வை கண்டறிய பயன்படுத்தப்படும் ‘ஹாக்ஐ’ நுட்பம் இந்த தொடர் முழுவதும் சராசரி அளவில் தான் இருக்கிறது. எப்படியோ அது இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனான ஜோ ரூட்டின் கதையை முடித்து விட்டது” என்று கூறியுள்ளார்.

இது சர்ச்சையானதும் அவர் தனது பதிவை நீக்கி விட்டார். இன்னொரு பதிவில் ரூட்டின் அவுட்டுக்கான ரீப்ளேயை ஏன் அதிக முறை போட்டு காண்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

Dhananjaya and tailenders help Sri Lanka to 312

Lincoln

அந்த அம்சம் இப்போ ஐ.ஒ.எஸ்.-லும் வந்தாச்சு : வாட்ஸ்அப் அசத்தல்..!

Lincoln

P. de S. Kularatne clinch title

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy