Sangathy
NewsWorld Politics

பிலிப்பைன்ஸில் புதிய உச்சத்தை எட்டிய அரிசி விலை…!

பிலிப்பைன்ஸில் சமீப காலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த டிசம்பருடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் உயர்ந்து 22.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதனால் அரிசி விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அரசின் கையிருப்பிலுள்ள அரிசியை சட்ட விரோதமாக விற்பனை செய்ததே இதற்கு காரணமென குற்றம் சாட்டப்படுகிறது.

இதற்கிடையே அரிசி விலையை குறைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். எனவே விவசாய துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், அரிசி விற்பனை ஊழல் தொடர்பாக தேசிய உணவு ஆணையத்தின் தலைவர், அதிகாரிகள் உட்பட 138 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் பிரான்சிஸ்கோ டியு லாரல் கூறினார்.

Related posts

Gotagogama activist actress Damitha remanded till 14 Sep.

Lincoln

UK: Black Lives Matter activist statue removed from pedestal in Bristol

Lincoln

லிட்டர் கணக்கில் ரத்தம் சொட்ட ஆகாய பயணத்தில் அலறல்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy