Sangathy
World Politics

பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு..!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டின் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வருகிறார்கள். இருப்பினும் டெங்கு காய்ச்சல் பரவலின் வேகம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு இதுவரை 15 இலட்சத்து 83 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்ததாகவும், அதில் 12 ஆயிரத்து 652 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்ததாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இவ்வாண்டில் இதுவரை 391 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 854 உயிரிழப்புகள் விசாரணையில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்க நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு விகிதம் தற்போது 1,00,000 மக்களுக்கு 757.5 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Venom of Trump, Tucker Carlson & Murdoch’s Fox News

Lincoln

கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர் படுகொலை : நடந்தது என்ன..?

Lincoln

முதலில் மனைவியின் சேலைகளை எரியுங்கள் : இந்திய பொருட்களை எதிர்ப்பவர்களுக்கு ஷேக் ஹசீனா பதிலடி..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy