Sangathy
World Politics

கிம் ஜாங் உன்னை சந்திக்க ஜப்பான் பிரதமர் விருப்பம் : வடகொரியா..!

தென்கொரியா மற்றும் அமெரிக்காவு தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதும் வட கொரியா, இரு நாடுகளுக்கும் எதிராக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வடகொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.

இந்த விசயத்தில் வடகொரியா- அமெரிக்காவுடன் ஜப்பான் இணைந்து வடகொரியாவை எதிர்த்து வருகிறது.

இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக, வட கொரியா அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.

ஒரு டி.வி. சேனலில் பேசும்போது ஜப்பான் பிரதமர் தனது விருப்பத்தை தெரிவித்ததாக கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அந்த டி.வி. பெயர் அவர் குறிப்பிடவில்லை.

மேலும், “இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படுவது ஜப்பான் கையில் உள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கடத்தப்பட்ட கடந்த கால குற்றச்சாட்டை தீர்ப்பது தொடர்பான முயற்சியை கடைபிடித்தால், தனது பிரபலத்தை உயர்த்துவதற்காகவே பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற விமர்சனத்தை அவரால் தவிர்க்க முடியாது” என்றார்.

Related posts

இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து : 29 ஊழியர்கள் பலி…!

tharshi

காஸாவில் உடனடியாக போர் நிறுத்த வலியுறுத்தல்..!

tharshi

கப்பல் மோதியதில் நொறுங்கி விழுந்த பாலம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy