Sangathy
India

கலிபோர்னியாவில் நடந்த விபத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தருண் ஜார்ஜ். இவர் ஐக்கிய அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் பணியாற்றி வருகிறார். அவர் அங்கேயே தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று தருண்ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் காரில் சென்றார். கலிபோர்னியாவில் பிளசன்டன் பகுதியில் ஸ்டோனிரிட்ஜ் டிரைவ் புட்ஹில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது அவர்களது கார் விபத்தில் சிக்கியது.

இதில் அவர்களது கார் முற்றிலுமாக நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி தருண் ஜார்ஜ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

கார் முற்றிலுமாக நொறுங்கியிருப்பதால் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதனடிப்படையில் பிளசன்டன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன : பிரதமர் மோடி..!

tharshi

விமானத்தில் ஜன்னலோர இருக்கைக்கு கூடுதல் கட்டணம் செலுத்திய பயணிக்கு அதிர்ச்சி..!

tharshi

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது குவியும் புகார்கள் : ஒரு நபர் குழு அமைத்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவு..!

Tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy