Sangathy
Srilanka

காணாமல்போன 30 இலட்சம் கிலோ நெல் குறித்து CID விசாரணை..!

நிகவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 2022 ஆம் ஆண்டுக்கான 30 இலட்சம் கிலோ நெல் காணாமல் போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளின் முதற்கட்ட அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன நெல் கையிருப்பின் பெறுமதி 1 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நெல் விற்பனைச் சபை நெல் கொள்வனவுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும், 11 ஆம் திகதிக்குள் விவசாயிகளுக்கு கொள்வனவு செய்யப்பட்ட நெல்லுக்கான பணம் வழங்கப்படும் எனவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு..!

Lincoln

அனுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியில் விபத்து : மூவர் பலி – இருவர் காயம்..!

Lincoln

இலங்கை வந்த கப்பலில் அபாயகரமான பொருட்கள் : விசாரணைக்கு சஜித் கோரிக்கை..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy