Sangathy
Cinema World

அமரன் ரிலீஸ் திகதியை லாக் செய்த கமல் : களமிறங்கும் சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இதையடுத்து அமரன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை தொடர்ந்து அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகி சுமாரான வெற்றியை பெற்றது. இதையடுத்து அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகின்றார்.

மறைந்த ராணுவ வீரர் முகுந்த வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக அமரன் உருவாகி வருகின்றது. இதையடுத்து ஏ.ஆர் முருகதாஸின் இயக்கத்தில் SK23 திரைப்படத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் படப்பிடிப்பும் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தனது 25 ஆவது திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார் சிவகார்த்திகேயன். எனவே சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பிசியாக பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றார். இதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் அமரன் திரைப்படத்திற்கு தான் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் இப்படம் மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வருகின்றன. முதல்முறையாக கமர்ஷியல் படமாக இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக அமரன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அமரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது.

ஆனால் அதே ஆகஸ்ட் மாதம் விஜய்யின் GOAT திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது GOAT திரைப்படம் செப்டம்பர் மாதம் விநாயகம் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அமரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது.

ஆனால் அதே ஆகஸ்ட் மாதம் விஜய்யின் GOAT திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது GOAT திரைப்படம் செப்டம்பர் மாதம் விநாயகம் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அமரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது.

படத்தின் கதை மீது கமலுக்கு அதீத நம்பிக்கை இருப்பதால் கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பதால் புஷ்பா 2 வுடன் அமரன் படத்தை வெளியிட கமல் முடிவெடுத்துள்ளாராம். ஒருவேளை புஷ்பா 2 படத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ அமரன் திரைப்படம் வெளியாகவும் வாய்ப்புள்ளதாம்.

எப்படி இருந்தாலும் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாவது உறுதி என்றே தகவல்கள் வருகின்றன. எனவே சொன்னபடி அமரன் ஆகஸ்ட் மாதம் வெளியாகின்றதா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மணிகண்டனை பாராட்டிய உதயநிதி : ஏன் தெரியுமா?

Lincoln

உலக சினிமாவில் முதல் முறை : இரு நாய்கள் மட்டுமே நடித்த படம்..!

tharshi

காதல் காமெடியுடன் மார்ச் 29 OTT-யில் வெளியாகும் ‘பிரேமலு’..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy