Sangathy
Sports

ஐ.பி.எல். 2024 : ரோகித்தின் புதிய சாதனை..!

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (14) மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 186 ஓட்டங்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் அடித்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். அவர் 63 பந்துகளில் 11 பவுண்டரி, ஐந்து சிக்ஸ் உடன் 105 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இரு அணிகளுக்கு இடையில் ஐபிஎல் தொடங்கிய முதல் வருடமான 2008இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் சனத் ஜெயசூர்யா சதம் அடித்திருந்தார். அதற்குப் பிறகு சுமார் 16 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தற்போது சதம் அடித்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் அடித்த இரண்டாவது மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் பதிரனா 4 விக்கெட் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். டோனி 4 பந்தில் 3 சிக்சருடன் 20 ஓட்டங்கள் விளாசியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Aaqib Javed appointed Sri Lanka’s fast-bowling coach

John David

Engineers defeat Lawyers by five wickets in final

Lincoln

Bandaranaike meet Al-Humaisara at Surrey Village today

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy