ஐக்கிய அரபு எமிரேட்சில் பெய்த கனமழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது.
இதில் ஐக்கிய அரபு எமிரேட்சில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட நகரங்களில் கனமழையால் பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின.
அப்பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. சுரங்கப்பாதைகளில் மழைநீர் புகுந்ததால் அவை மூடப்பட்டுள்ளன. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.