Sangathy
World Politics

இஸ்ரேலிடம் இருக்கும் ஒற்றை ஆயுதம்.. சைலண்ட்டாக பின்வாங்கிய ஈரான் : அப்படி என்ன ஆபத்து..?

ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் மீது ஒரே ஒரு பயங்கர ஆயுதத்தை கொண்டு தாக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆயுதம் பிரயோகிக்கப்பட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஈரான் சந்திக்கும் என சர்வதேச உளவு அமைப்புகள் எச்சரிக்கின்றன.

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் மூளும் அபாயம் உருவாகியுள்ள நிலையில், இஸ்ரேலிடம் உள்ள ஒற்றை ஆயுதத்தை பார்த்து ஈரான் பயந்து பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி என்ன தான் இஸ்ரேல் ஆயுதத்தை வைத்திருக்கிறது என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

அது என்ன ஆயுதம் என்பதை இங்கு பார்க்கலாம்.

இஸ்ரேல் – ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் மத்திய கிழக்கு பிராந்தியமே ஒருவித கொதிநிலையில் இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத சூழல் தான் அங்கு நிலவி வருகிறது. தனது முக்கிய ராணுவத் தளபதி, இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதால் ஈரான் கடுங்கோபத்தில் இருந்தது. இதற்கு பழிதீர்க்கும் விதமாக நேற்று இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் பயங்கர தாக்குதலை நடத்தி இருக்கிறது ஈரான். இந்த தாக்குதலில் இஸ்ரேலின் பல நகரங்கள் நிலைக்குலைந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் முழுவீச்சில் தயாராகி வருகிறது. நேற்று இரவு ஈரான் மீது எப்போது, எத்தகைய தாக்குதலை நடத்தலாம் என்பது குறித்து இஸ்ரேல் அமைச்சரவை அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள ஈரானும் தயார்நிலையில் இருப்பதால், எந்த நேரத்தில் போர் மூளும் என்ற பதற்றம் உலக நாடுகளை தொற்றியுள்ளன. ஒருவேளை, இஸ்ரேல் – ஈரான் இடையே போர் மூண்டால் உலகப்போராக கூட இது மாறும் என்று சர்வதேச உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இந்நிலையில்தான், இஸ்ரேலிடம் இருக்கும் ஒரு ஆயுதத்தை அறிந்து ஈரான் பீதி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆயுதம் நாம் நினைப்பது போல அணு ஆயுதம் எல்லாம் கிடையாது. ‘தெர்மல் வெப்பன் ரேடியசன்’ (Thermal Weapon Radiation) என்பது தான் அந்த ஆயுதத்தின் பெயர் ஆகும். இந்த ஆயுதத்தை கொண்டு தாக்கினால், மக்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. ஆனால், அந்நாட்டில் உள்ள அனைத்து மின்னணு பொருட்களும் முற்றிலுமாக செயலிழந்து விடுமாம். அதாவது சாதாரண செல்போன் முதல் சேட்டிலைட் வரை அனைத்தும் செயலிழந்து விடும் எனக் கூறப்படுகிறது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்து ஆயுதங்களும் மின்னணு சாதனங்களை கொண்டே இயக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு நாட்டின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்த வேண்டுமானாலும், ஜிபிஎஸ் மூலமாகவே அது செயல்படுத்தப்படுகிறு. ஆனால், இந்த தெர்மல் வெப்பன் ரெடியேசன் ஆயுதம் தாக்கிய அடுத்த நொடியே இவை அனைத்தும் செயலிழந்துவிடும். மேலும், எதிரிநாட்டு ஏவுகணைகளை கண்டறியும் ரேடார கருவிகளும் செயலிழந்துவிடும். இவ்வாறு செயலிழந்துவிட்டால் கிட்டத்தட்ட நிராயுதபாணியாக அந்த நாடு மாறிவிடும். இதையடுத்து, அந்த நாட்டின் மீது எளிதாக தாக்குதல் நடத்த முடியும்.

தற்போது இந்த ஆயுதத்தை தான் ஈரான் மீது பிரயோகப்படுத்த இஸ்ரேல் ஆலோசித்து வருகிறது. இதுபற்றிய தகவலை அறிந்த ஈரான், பெரும் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

அயா்லாந்தின் புதிய பிரதமராக சைமன் ஹரிஸ் பொறுப்பேற்பு..!

tharshi

வெள்ளத்தில் மூழ்கிய டுபாய்..!

Lincoln

உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy