பிரபல கிரிக்கெட் ஜாம்பவானாக சச்சின் டெண்டுல்கர் மணிரத்னத்தின் படத்தை திரையில் மாறுவேடத்தில் பார்த்துள்ளதாக தகவல் வந்துள்ளது
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனர் தான் மணிரத்னம். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாத மணிரத்னம் பகல் நிலவு என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு இதய கோயில் என்ற படத்தையும் இயக்கினார் மணிரத்னம். இவ்விரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியினை பெறாத நிலையில் மௌன ராகம் என்ற திரைப்படத்தை இயக்கினார் மணிரத்னம்.
இப்படம் தான் மணிரத்னத்தை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது என்றே சொல்லலாம். இளையராஜாவின் இசை ரேவதி, மோகன், கார்த்திக் ஆகியோரின் நடிப்பு, மணிரத்னத்தின் இயக்கம் என அனைத்துமே இப்படத்தில் சிறப்பாக இருந்தது. அதன் காரணமாகவே இப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக உருவெடுத்தார் மணிரத்னம்.
அதன் பிறகு கமலை வைத்து இவர் இயக்கிய நாயகன் திரைப்படம் மணிரத்னத்தை இந்தியளவில் கொண்டுசென்றுவிட்டது. அதைத்தொடர்ந்து அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக கொடுத்து இந்திய திரையுலகின் ஜாம்பவானாக திகழ துவங்கினார் மணிரத்னம். தற்போதும் கூட பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுத்து தமிழ் சினிமாவை மணிரத்னம் பெருமைப்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து தற்போது கமலை வைத்து தக்லைப் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார் மணிரத்னம். இந்நிலையில் மணிரத்னத்தின் திரைப்படத்தை திரையில் காண பிரபல பிரிக்கெட் வீரர் மாறுவேடத்தில் திரையரங்கிற்கு சென்றுள்ளாராம். அப்போது நடந்த சம்பவம் பற்றி அவரே பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்பட்டு வருபவர் தான் சச்சின். இந்திய கிரிக்கெட்டை பெருமைப்பட செய்த சச்சின் அஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் காதலிக்கும் சமயத்தில் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற திரைப்படத்தை திரையில் காண சென்றுள்ளனர். சச்சின் சிங் கெட்டப் போட்டுகொண்டு அஞ்சலியுடன் ரோஜா படம் பார்க்க திரையரங்கிற்கு சென்றுள்ளார். பாதி படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சச்சினின் கெட்டப் கலைந்து விட்டதாம்.
உடனே அங்கிருக்கும் ரசிகர்கள் சச்சினை அடையாளம் கண்டுகொண்டு ஆரவாரம் செய்துள்ளனர். ஒருவழியாக சச்சின் எப்படியோ அங்கிருந்து வெளியேறியிருக்கின்றாராம். இந்த தகவலை சச்சின் தன் சுயசரிதையில் பதிவு செய்திருக்கின்றார்.