திருக்கேதீஸ்வரம் ஆலய கொடியேற்றம் நாளை: கொடிச்சீலை யாழிலிருந்து சென்றது

வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுக்கான கொடிச்சீலை இன்று  புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து ஆலயத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள செங்குந்த மரபினரான சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டு திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இதைத்தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு கொடிச்சீலை வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது.

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Indian street procession with men carrying a flower‑garlanded palanquin under a red parasol, while a woman plays a shehnai and others march in colorful traditional attire. Group of people in traditional Indian attire praying at a home shrine with framed deities and flowers. Ornate Hindu altar with a garlanded deity statue draped in red and gold, set against a gold decorative backdrop and silver arches, surrounded by flowers and lamps.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles