முடிந்தால் பஸில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சவால் விடுத்துள்ளார்.
அண்மைய நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளன.
பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இந்த சவாலை விடுத்துள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற பலத்த வாதங்கள் கடந்த காலத்தில் இருந்ததாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக எதிர்வரும் காலங்களில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.
