ஊவா மாகாணத்தில் 5 மாதங்களில் 80 சிறார் பாலியல் துன்புறுத்தல்கள்!

ஊவா மாகாணத்தில் கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் 80 சிறுவர் பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன என்று மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 604 சிறுவர்கள் ஊவா மாகாணத்திலுள்ள 18 சிறுவர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆணையாளர் தீக்ஷனா எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வெல்லவாய, மொனராகலை ஆகிய பகுதிகளில் இந்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த வருடத்துக்குள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 186 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் 80 வழக்குகள் பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் தொடர்பானவை. 60 வழக்குகள் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புரிமை தொடர்பானவை – என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles