புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணமடைகின்றனர் என்று புகையிலை மற்றும் மதுசாரம்மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.
புகையிலை பயன்பாட்டால் இருநூறுக்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன என்று அந்த சபையின் தலைவரும் மருத்துவருமான ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘இந்தச் சிறிய நாட்டிற்குள் புகையிலை பயன்பாட்டால் வருடத்துக்கு சுமார் 22 ஆயிரம் பேர் வரை மரணமடைகின்றனர். பொருளாதார இழப்புகள் பற்றி பேசினால்இ 2016 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி வருடத்துக்கு
தோராயமாக 21 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவாகிறது. இது ஒரு தாமரைக்கோபுரம் கட்டுவதற்குச் சமம். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளைப் பராமரிப்பதற்காக நாம் செலவிடும் தொகையானது, 16 தாமரைக்கோபுரங்களைக் கட்டுவதற்கு அல்லது இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதற்குச் செலவாகும் தொகையாகும்.”
இலங்கையில் மாத்திரம் 90 இலட்சம் முதல் ஒரு கோடியே 10 இலட்சம் வரையிலான சிகரெட் பில்டர்கள் சூழலில் விடுவிக்கப்படுகின்றன. இந்த உபயோகிக்கப்பட்ட பில்டர்களில் கடுமையான இரசாயனங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றால் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் அளவிட முடியாதவை.” என்றார்.
