முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோட்டாபய ராஜபக்ஷ உட்பட மூவருக்கு நீதிமன்றம் வெளிநாட்டு பயண தடை விதித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலேயே கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
புலனாய்வு துறையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு பயண தடையை நீதிவான் விதித்தார்.
