கனடாவிலிருந்து அல்பேர்ட்டா மாகாணம் பிரிந்தால் கனடா கடவுச்சீட்டை பயன்படுத்துவதில் சிக்கல்

கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் வாழும் ஒரு தரப்பினர், அல்பேர்ட்டா மாகாணத்துக்கு கனடாவிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என கோரி வருகிறார்கள்.

இந்நிலையில், அப்படி அல்பேர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்தால், அதற்குப் பிறகு அல்பேர்ட்டா மக்கள் கனடா கடவுச்சீட்டை பயன்படுத்தமுடியுமா என்பது போன்ற சில கேள்விகள் எழுந்துள்ளன.

அல்பேர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்தால், அதற்குப் பிறகும் அல்பேர்ட்டா மக்கள் கனேடிய கடவுச்சீட்டைப் பயன்படுத்த முடியுமா என்பதை கனடா அரசுதான் முடிவு செய்யவேண்டும்.

கனடா இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கிறது. ஆனால், அல்பேர்ட்டா கனடாவிலிருந்து பிரிந்தபின்பு, அல்பேர்ட்டாவில் வாழும் மக்கள் நிலை என்ன என்பதை உடனடியாக முடிவு செய்யமுடியாது.

மேலும், அல்பேர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்து தனியாக தனக்கென ஒரு கடவுச்சீட்டை உருவாக்கிக்கொள்ளும் நிலையில், அல்பேர்ட்டா மக்கள் வேறு நாடுகளுக்கு பயணிக்கும் நிலையில், மற்ற நாடுகள்அல்பேர்ட்டாவின் கடவுச்சீட்டை அங்கீகரிக்குமா என்னும் கேள்வி எழுந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.

அல்பேர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணம். ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு ஃபெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை.

ஆகவே, வளம் நிறைந்த அல்பேர்ட்டா, கனடாவிலிருந்து பிரிந்து தன்னைத்தான் நிர்வகிக்கவேண்டும் என அல்பேர்ட்டா மக்கள் கருதுகிறார்கள்.

ஆனால், அல்பேர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரியவேண்டும் என விரும்புபவர்கள், பிரிந்தால், இப்படி பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை யோசிக்கவில்லையோ என்னவோ?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles