செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய தினம் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. ஏற்கனவே இனங்காணப்பட்ட 7 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இதன் மூலமாக செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், 318 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு 3ஆவது கட்டத்தின் 21ஆவது நாளாக இன்று புதன்கிழமை நடைபெற்றது. அகழ்வுப் பணிகள் யாவும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த அகழ்வு பணிகளில் ருகுணு பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்றிருந்தனர்.
