அடுத்த ஆண்டில் மூலதன செலவுக்காக 2 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டிலும் சுமார் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
களுத்துறையில் 14 வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை தொடக்கி வைத்த பின்னர் உரையாற்றியபோதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அத்துடன், அரசின் வருமானம் கடந்த 2025 மற்றும் நடப்பு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில், அரசுக்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. கடந்த ஆண்டு நாட்டின் வரலாற்றில் அதிகபட்ச ஏற்றுமதி வருமானம் பதிவானது. வெளிநாட்டு பண அனுப்பல்கள் அதிகரித்துள்ளன. சுற்றுலாத்துறை தொடர்ந்து முன்னேற்றம் அடைகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
