அசாம் மழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு

அசாம் மாநிலத்​தின் சிவ​சாகர் உள்​ளிட்ட 25 மாவட்டங்​களில் கடந்த சில நாட்​களாக பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. இந்த வெள்ளத்தால் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோல்பாரா, காக்சார், லக்கிம்பூர், தீமாஜி, திப்ருகர், ஜோர்ஹட், பிஸ்வநாத், சாராய்தியோ, நல்பாரி, பஜாலி, சிராங், கோக்ரஜார், பொங்கைகோன், பக்சா, சிவசாகர், தர்ரங், சோனித்பூர், தின்சுகியா, உதல்குரி, கோலாகாட், நாகோன், கர்பி அங்லோங், கம்ருப், ஹோஜாய் உள்ளிட்ட 25 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 600 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தால் 11 லட்சத்து 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “11 லட்சத்து 44 ஆயிரத்து 733 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு சார்பில் 215 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 71 ஆயிரத்து 223 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மழை, வெள்​ளம் காரண​மாக இது​வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5.65 லட்சம் மக்​கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்கள் தங்குவதற்கு வசதி​யாக மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்​ளன. உயிரிழந்தோர் குடும்பங்​களுக்கு தலா ரூ.4 லட்​சம் நஷ்ட ஈடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சிவசாகர் மாவட்டத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சாராய்தியோ மாவட்டத்தில் 20 பேரும், ஜோர்ஹட்டில் 9 பேரும், தீமாஜி மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காணாமல் போயுள்ளனர். இதில், சிவசாகர் மாவட்டத்தில் 7 பேரும், தீமாஜி மாவட்டத்தில் ஒருவரும் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதனிடையே, அசாம் எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை குறித்து கலந்துரையாடினேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதில் மத்திய அரசு, அசாம் மாநில அரசுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles