மலேசியாவின் Danau Kota இடைநிலை பாடசாலையைச் சேர்ந்த கெஷியா நிஷா என்ற 14 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டசம்பவம் தொடர்பில், அவர் பள்ளியில் பகிடிவதைக்கு ஆளாகி வந்ததார் எனவும், இது குறித்து குடும்பத்தினர் ஏற்கனவே பாடசாலையில் புகார் அளித்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெஷியாவின் மாமா மணி கூறுகையில் –
இந்தப் பகிடிவதை பிரச்சினை கடந்த பெப்ரவரி மாதம் முதலே இருந்து வந்ததாக குடும்பத்தினர் அறிந்திருந்தனர் எனத் தெரிவித்தார். மாணவி தாம் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் பள்ளிக்குச் சென்று முறையிட்டுள்ளனர்.
கெஷியாவின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்ற நிலையில், இந்த மரணம் குறித்து பொலிஸிட் புகார் அளித்துள்ள குடும்பத்தினர், பாடசாலையில் கொடுத்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, அவர் முன்பே தெரிவித்த பகிடிவதை குறித்த புகார்கள் எவ்வாறு கையாளப்பட்டன, பாடசாலை மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டனர் என்பதற்கு தெளிவான பதில் வேண்டும் என குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
கெஷியாவின் மரணத்திற்கு பள்ளியில் நடந்த பகிடிவதை காரணமா என்பது இன்னும்
பொலிஸ் விசாரணையில் உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியளவில் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசாருமான அமிருடின் ஷாரி இன்று கெஷியாவின் குடும்பத்தினரைச் சந்திக்கவுள்ளார்.
