அமெரிக்காவில் இந்தியர் மீது 17 தடவைகள் கத்திக் குத்து

அமெரிக்காவில் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா் மீது வெள்ளை இனத்தைச் சோ்ந்த ஒருவா் 17 முறை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினாா்.

இதில் படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவா் ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய பிராந்தியத்தைச் சோ்ந்தவா்கள் மீது இனரீதியாகவும், நிறரீதியாகவும் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பென்சில்வேனியா மாகாணத்தில நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அங்குள்ள ஊடகங்களில் வெளியான செய்தியில் பென்சில்வேனியாவின் தெற்கு வியோமிங் பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளானவா் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா். லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த அவரை வழிமறித்த ஆண்ட்ரூ கிரிஸ் பஸ்டாக் என்ற நபா் கத்தியால் 17 இடங்களில் அவரைக் குத்தியுள்ளாா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து தாக்குதலுக்கு உள்ளானரை மீட்டு விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய ஆண்ட்ரூ கிரிஸ், அப்பகுதி மக்கள் உதவியுடன் கைது செய்யப்பட்டாா். அவா் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யபபட்டுள்ளன.

தெற்காசியாவைச் சோ்ந்தவா்கள் மீதான இனரீதியான வெறுப்புணா்வு அடிப்படையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles