Sangathy
News

ஜப்பான் நோக்கி பயணித்த விமானம் தொழில்நுட்ப கோளாறினால் தரையிறக்கம்

Colombo (News 1st) கட்டுநாயக்கவிலிருந்து ஜப்பானின் நரிட்டா(Narita) சர்வதேச விமான நிலையம் நோக்கி நேற்றிரவு(29) பயணித்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று மீண்டும் கட்டுநாக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

UL- 454 என்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டார்.

விமான பணியாளர்கள் மற்றும் 301 பயணிகளுடன் நேற்றிரவு 8.20க்கு பயணத்தை ஆரம்பித்த விமானம், 02 மணித்தியாலங்கள் 25  நிமிடங்களின் பின்னர் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த பயணிகளை மற்றுமொரு விமானத்தில் ஜப்பானுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.

Related posts

Rs. 45 bn owed to health sector suppliers, banks

Lincoln

ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார மீதான தடையை நீக்கியது ஐக்கிய தேசியக் கட்சி

Lincoln

Political ties must for doing business in Sri Lanka: AKD

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy