Sangathy
News

Colombo (News 1st) பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தினை பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். குறித்த யுவதியின் மரணத்திற்கான உறுதியான காரணத்தை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் தற்போது வைத்தியசாலைக்கு சென்று தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், சமோதி சந்தீபனி எனும் குறித்த யுவதிக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்ட நாளில் மேலும் 12 பேருக்கு அதே ஊசி மருந்து செலுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 2715 பேருக்கு இந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த ஊசி மருந்தானது 2013 ஆம் ஆண்டு முதல் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Colombo (News 1st) புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் – ஓமந்தை ரயில் பாதையில் தண்டவாளங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

ரயில் பாதை புனரமைப்பு பணிகளின் போது நீக்கப்பட்ட தண்டவாளங்களை நேற்றிரவு கொண்டு சென்ற நபர்கள், யாழ் ராணி ரயிலில் மோதியதையடுத்து இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்ததாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ரயில் தண்டவாளங்களை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட Gas Cutter, ஒக்சிஜன் தாங்கி மற்றும் 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.

அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இந்திய கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து

Lincoln

Hirunika among 15 released on bail

Lincoln

ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று 19 வருடங்கள்!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy