Sangathy
AfricaNews

லிபியாவில் புயல், மழை: உயிரிழப்பு 5,200 ஆக அதிகரிப்பு, 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை

Libya: லிபியாவில் புயல், மழை காரணமாக 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் உருவான டேனியல் புயல் கடந்த 10 ஆம் திகதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. இதன்போது மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு லிபியாவில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் இரண்டு அணைகள் உடைப்பெடுத்தன.

இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த டொ்னா நகருக்குள் வெள்ளம் வெகு சீற்றத்துடன் பாய்ந்து, அங்கிருந்த வீடுகளை உடைத்து அவற்றின் இடிபாடுகளையும், அங்கிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பிற பொருட்களையும் அருகிலுள்ள கடலுக்குள் அடித்துச்சென்றது.

இந்த வெள்ளத்தில் 2000-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானவா்கள் காணாமற்போனதாகவும் பிரதமர் ஒசாமா ஹமாட் (Ossama Hamad) அறிவித்தார்.

டொ்னா நகர அவசர கால மீட்புக்குழுவினா் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலி எண்ணிக்கை 2,300-ஆக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், தற்போது லிபியாவின் கிழக்கு அரசின் உள்விவகார அமைச்சு குறைந்தது 5,300 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts

உதிரிப்பாகங்கள் என்ற பெயரில் 35 கோடி ரூபா பெறுமதியான 3 சொகுசு கார்கள் இறக்குமதி

Lincoln

வறட்சியினால் 18 பிரதேச மத்திய நிலையங்களுக்கு நீர் விநியோகிப்பதில் சிக்கல்

Lincoln

New elephant census next year

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy