Sangathy
News

வறட்சியினால் 18 பிரதேச மத்திய நிலையங்களுக்கு நீர் விநியோகிப்பதில் சிக்கல்

Colombo (News 1st) வறட்சியினால் 18 பிரதேச மத்திய நிலையங்களுக்கு நீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக மத்திய நிலையங்கள் காணப்படுவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தெற்கு பிராந்திய உதவி பொது முகாமையாளர் சமந்த குமார தெரிவித்தார்.

அவற்றில் 32 நீர் விநியோக மத்திய நிலையங்கள் அபாய மட்டத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த பிரதேசங்கள் வலயங்களாகப் பிரிக்கப்பட்டு நேர அட்டவணையின் அடிப்படையில் நீர் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சில பகுதிகளில் கொள்கலன் தாங்கி வாகனங்கள் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தெற்கு பிராந்திய உதவி பொது முகாமையாளர் சமந்த குமார தெரிவித்தார்.

வெப்பமான காலநிலையினால் ஹம்பாந்தோட்டை, பதுளை, மொனராகலை, அம்பாறை, குருணாகலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

Related posts

Six fishers rescued from ill-fated trawler

Lincoln

நிதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு

John David

Security Council to meet PBC today to discuss implications of coronavirus in conflict-affected countries

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy