Sangathy
News

தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டை இடைநிறுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

Colombo (News 1st) இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தெரிவுகளை இரத்து செய்ய திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் தரப்பில் இன்று(29) இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மாநாட்டை இடைநிறுத்த கோரி திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று(29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இது தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாத்தினர் முன்னிலையாகியிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, சண்முகம் குகதாசன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் வழக்கில் தமிழரசு கட்சி சார்ந்த குறித்த தெரிவுகளை மீள நடத்த உடன்பட்டதன் அடிப்படையில் வழக்கை முடிவுறுத்துமாறு பிரதிவாதிகள் கோரினர்.

எனினும், ஆறாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரனின் கருத்தை அறிவதற்கான தேவை காணப்படுவதால் வழக்கு ஏப்ரல் மாதம் 05 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம்

John David

SJB fears for life of IUSF convener taken out of prison at night

Lincoln

Hikkaduwa becomes Ryan Reynolds’ favourite location

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy