Sangathy
News

காணாமல் போன நெல் தொகையின் பெறுமதி 65 மில்லியன் ரூபா – நெல் சந்தைப்படுத்தல் சபை

Colombo (News 1st)  குருணாகலிலுள்ள நெல் களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல் போயுள்ள நெல் தொகையின் பெறுமதி 65 மில்லியன் ரூபா என நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

நெல் தொகை காணாமல் போனமை தொடர்பான இறுதி அறிக்கை விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நாளை மறுதினம்(02) கையளிக்கப்படவுள்ளதாக சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட குறிப்பிட்டுள்ளார்.

நிக்கவெரட்டிய மற்றும் மஹவ நெல்  களஞ்சியசாலைகளில் இருந்து 650,000 கிலோகிராம் நெல் காணாமல் போயுள்ளது.

பொல்கஹவெல நெல் களஞ்சியசாலை இன்று(31) பரிசோதிக்கப்படவுள்ளது.

குருணாகலிலுள்ள களஞ்சியசாலைகளில் நெல் தொகை காணாமல் போனமை தொடர்பில் குறித்த களஞ்சியசாலைகளுக்கு பொறுப்பாக செயற்பட்ட அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 2 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.

Related posts

இரத்மலானை துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை

Lincoln

Dulla’s insatiable appetite for excellence

Lincoln

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு; 50,000 பேர் வௌியேற்றம் – தேசிய கட்டட ஆய்வு நிறுவகம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy