Sangathy
News

தலைமன்னார் கடற்பரப்பில் 67.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு

Colombo (News 1st) தலைமன்னார் கடற்பரப்பில் 67.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தலைமன்னார் மணல் திட்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் 04 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்பிராந்தியங்களில் முன்னெடுக்கப்படும் விசேட கண்காணிப்புகள் காரணமாக, நாட்டிற்குள் போதைப்பொருளை கடத்த முடியாமல் போவதால், கடத்தல்காரர்களால் இவ்வாறு போதைப்பொருட்கள் கைவிட்டுச் செல்லப்படுவதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் வரை, அவற்றை தமது பொறுப்பில் வைத்திருக்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

ஐ.நா. தலைமையகத்திற்கு அடியில் சுரங்கப்பாதைகள் : இஸ்ரேல் ராணுவம்

Lincoln

Chinese coronavirus vaccine starts final tests in Brazil

Lincoln

A teaser from RW to JVP/NPP lawyer Sunil Watagala

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy