Sangathy
LatestNewsOther Places

ஐ.நா. தலைமையகத்திற்கு அடியில் சுரங்கப்பாதைகள் : இஸ்ரேல் ராணுவம்

கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பினரை காசா பகுதி முழுவதும் இஸ்ரேலிய ராணுவ படையினர் தேடித்தேடி வேட்டையாடி வருகின்றனர்.

இந்நிலையில், காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான தலைமையக அலுவலகத்திற்கு கீழே சுரங்கப்பாதைகள் உள்ளதை கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

“இந்த சுரங்கப்பாதைகள் ஹமாஸ் போராளிகளால் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான மின்சார வினியோகம் ஐ.நா. அமைப்பின் தலைமையகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது” என இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு, ஹமாஸ் அமைப்பினருக்கு மறைமுகமாக உதவி வருவதாக முன்னரே இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இப்பின்னணியில் இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கிறது.

ஆனால், சுரங்கப்பாதைகளில் ஹமாஸ் போராளிகள் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் தற்போது வரை முன்வைக்கப்படவில்லை.

இந்த சுரங்கபாதை அரை கிலோமீட்டர் தூர நீளத்துக்கு உள்ளது என்றும் இதில் ஆங்காங்கே 10 கதவுகள் இருந்து உள்ளன என இதனை பார்வையிட்ட பத்திரிகையாளர்களிடம் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

காசாவின் குறுக்கே பல கிலோமீட்டர் சுரங்கப்பாதைகளை கட்டியதை ஹமாஸ் ஒப்புக்கொண்டு உள்ளது.

அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முக்கிய நோக்கங்களில், காசாவில் ஹமாஸ் அமைத்திருக்கும் அனைத்து கட்டுமான வசதிகளை அழிப்பதும் ஒன்று என இஸ்ரேல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Petition challenging Diana’s citizenship gets go ahead from CA

Lincoln

தமிழர்களின் உணர்வோடு கலந்த தைப்பொங்கல் பண்டிகை

John David

Marlon Samuels slapped with six-year ban under anti-corruption code

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy