Sangathy
News

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

Colombo (News 1st) சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாமுனை மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளுக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியங்களில் நேற்றும்(17) நேற்று முன்தினமும்(16) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக இரவு ​வேளையில் சுழியோடியமை மற்றும் தடை செய்யப்பட்ட முறையில் மீன்பிடித்த 12 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் 03 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார், தாழையடி, பிள்ளையார் கோவிலடி, புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற 102 கைதிகள் கைது

John David

Showers in Sabaragamuwa, Galle and Matara in afternoon or night

Lincoln

Lanka keen to import ethanol from India

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy