Sangathy
News

ஜூலை மாதத்திற்குள் மின்சார கட்டணங்கள் மீளாய்வு செய்யப்படும்: கஞ்சன விஜேசேகர

Colombo (News 1st) 2022 டிசம்பரில் எடுக்கப்பட்ட அரசாங்க கொள்கை மற்றும் அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்க, ஜூலை 2023-க்குள் மின்சாரக் கட்டணங்கள் மீளாய்வு செய்யப்பட்டு, திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது செலவு பிரதிபலிப்பு விலை பொறிமுறையை (cost reflective pricing mechanism ) செயல்படுத்துவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார விலையை மீளாய்வு  செய்து திருத்துவதற்கும் உதவும் என அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிக முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான கட்டணத்தை கணக்கிடுவதற்கான புதிய சூத்திரத்தை பின்பற்றுவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய சூத்திரம் புதிய மின் கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு மட்டுமே பொருந்தும்  என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

Related posts

தங்கோவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் தீ

John David

அரசியல் கைதிகளுக்காக புலம்பெயர் அமைப்புக்கள் குரல் கொடுக்க வேண்டும்! – கோமகன்

Lincoln

Elephantine battle erupts over counting of jumbos

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy