Sangathy
News

கொடியைப் பறித்த ரஷ்ய பிரதிநிதி; ஆக்ரோஷமாக தாக்கிய உக்ரைன் பாராளுமன்ற உறுப்பினர்

உக்ரைன் பாராளுமன்ற உறுப்பினரிடம் இருந்து உக்ரைன் கொடியை பறித்துச் சென்ற ரஷ்ய பிரதிநிதியால், கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 ஆவது சர்வதேச மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது.

கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 ஆவது சர்வதேச மாநாடு துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது.
இதில் ரஷ்யா, உக்ரைன் மட்டுமின்றி அல்பேனியா, அர்மேனியா, அசர்பஜைன் உட்பட உறுப்பு நாடுகள் பங்கேற்றிருந்தன.

சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட உக்ரைன் பாராளுமன்ற உறுப்பினர் Oleksandr Marikovskyi தனது நாட்டுக் கொடியை கையில் வைத்திருந்தார்.

இதனை பார்த்த ரஷ்ய பிரதிநிதி உக்ரைன் பாராளுமன்ற உறு்பினரின் கையில் வைத்திருந்த தேசியக் கொடியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து செல்ல முயன்றார்.

பின் ரஷ்ய பிரதிநிதியை துரத்திச்சென்ற உக்ரைன் பாராளுமன்ற உறுப்பினர், அவர் கையில் வைத்திருந்த உக்ரைன் கொடியை மீண்டும் பறித்துக்கொண்டார்.

மேலும், ரஷ்ய பிரதிநிதியின் செயலுக்கு உடனடியாக தக்க பதிலடி கொடுக்கும் வகையில், Oleksandr Marikovskyi அவரது முகத்தில் கடுமையாக தாக்கினார். இருவரிடையே ஏற்பட்ட மோதலை அங்கிருந்த மற்ற அதிகாரிகள் தலையிட்டு தடுத்தனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச மாநாடு ஒன்றில் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Related posts

Authorised agent in Sri Lanka for Turkish visas

Lincoln

Nigeria’s Calabar carnival: 14 killed at annual bikers’ event -BBC

Lincoln

Wildlife Director finally cracks the whip against those feeding wild elephants from vehicles

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy