Sangathy
News

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன

Colombo (News 1st) திருத்தப் பணிகள் காரணமாக நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியை 100 நாட்கள் செயலிழக்க செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு மூன்றாவது மின்பிறப்பாக்கி செயலிழக்கச் செய்யப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தமது ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஏனைய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களை பயன்படுத்தி, எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் மின்சக்தி அமைச்சர் கூறியுள்ளார்.

அதற்கமைய, மின்னுற்பத்திக்கு தேவையான நிலக்கரியை ஏற்றிய 30 ஆவது கப்பல் நாட்டை வந்தடைந்தவுடன், மின்சார சபைக்கு தேவையான நிலக்கரி முழுமையாக கிடைக்கப்பெறும் என மின்சக்தி அமைச்சர் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Related posts

Unilever reinforces commitment to invest in Sri Lanka; lays foundation stone for its first malted beverage plant in Sapugaskanda

Lincoln

Health Ministry takes lead in cutting down salt by ordering all its canteens not to add it to rice

Lincoln

SLPP rebels seek external interventions as ruling party tightens grip undemocratically

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy