Sangathy
News

யாழ்ப்பாணத்தில் இருந்து 7 நாட்களும் விமான சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Colombo (News 1st) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கற்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

இந்த கடனுதவி கிடைக்கப்பெற்றதும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்.

Related posts

மலையக மார்க்கத்திலான இரவு தபால் ரயில் தாமதமடையும்: ரயில்வே திணைக்களம்

Lincoln

Lanka’s top envoy in Japan confident of early resumption of Japanese funding

Lincoln

Saddharathana Thera re-remanded

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy