Sangathy
News

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று(13)

Colombo (News 1st) கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று(13) இடம்பெறவுள்ளது.

காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் திருவிழா திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை தலைமை தாங்கி ஒப்புக்கொடுக்கவுள்ளார்.

முற்பகல் 10 மணிக்கு சிங்களத்திலும் நண்பகல் 12 மணிக்கு ஆங்கிலத்திலும் திருவிழா திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

அதன்பின்னர் மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி ஆரம்பமாகவுள்ளது.

பவனி கொச்சிக்கடை தேவாலயத்தை வந்தடைந்ததும் இரவு 8 மணிக்கு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் புனித அந்தோனியார் திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்படவுள்ளது.

Related posts

Abducted Pakistani journalist Matiullah Jan released in Islamabad

Lincoln

வத்தளை – லன்சியாவத்தை முகத்துவாரம் அருகில் ஆண் குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளது

Lincoln

Two dead 26 injured as bus goes down precipices in Norton Bridge

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy