Sangathy
News

2023 உலகக்கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடரின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சிரச TV வசம்

Colombo (News 1st) 2023 உலகக்கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடரின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சிரச TV தன்வசப்படுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்று ஊடக சந்திப்பில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள், தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜூன ரனதுங்க உள்ளிட்ட பலர் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

போட்டிகளை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் சிரச TV மற்றும் TV 1 ஊடாக எதிர்பாருங்கள்.

2023 உலகக்கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடர் ஜூன் 18 ஆம் திகதியில் இருந்து ஜூன் 27 ஆம் திகதி வரை சிம்பாப்வேயில் நடைபெறவுள்ளது.

இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டிற்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை இடம்பெறவுள்ளது.

பாகிஸ்தானில் நான்கு போட்டிகளும் இலங்கையில் எஞ்சிய 9 போட்டிகளும் இடம்பெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

 

Related posts

Pasadena High School senior believed to be first Sri Lankan American D1 Quarterback

Lincoln

US: Earthquake of magnitude 7 hits Papua New Guinea, tsunami risk fades

Lincoln

Australia cuts citizen returns as coronavirus surge worsens

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy