Sangathy
News

முச்சக்கர வண்டிகளில் அலங்காரங்களை மேற்கொள்ள கட்டணம் அறவிடும் முறைமை அறிமுகம்

Colombo (News 1st) முச்சக்கர வண்டிகளில் பாகங்களை பொருத்துவதற்கும் அலங்காரங்களை மேற்கொள்வதற்குமான கட்டணம் அறவிடும் முறையை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் கீழ் முச்சக்கர வண்டிகளுக்கு பின்னால் மேலதிகமாக (ஏணி போன்ற) அலங்காரங்களை மேற்கொள்வதற்கு 1000 ரூபா அறவிடப்படவுள்ளது.

முன்பக்க ஒற்றை மின் விளக்கிற்கு பதிலாக இரண்டு மின் விளக்குகளை பொருத்தினால் 2500 ரூபா வசூலிக்கப்படும்.

பிரதான மின் விளக்குகளுக்கு பதிலாக LED விளக்குகளை பொருத்துவதற்கு 1000 ரூபா கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

மூன்று பாகங்களைக் கொண்ட முன் கண்ணாடியை  தனிக்கண்ணாடியாக பொருத்துவதற்கு 2500 ரூபா அறவிடப்படவுள்ளது.

Related posts

“A friend in need is a friend indeed”: Sri Lanka’s praise for India

Lincoln

Lanka’s poor surge by 4 Mn to 31-pct of population: Survey

Lincoln

மனிதாபிமான உதவிகளுக்காக ரஃபா எல்லையை திறக்க எகிப்திய ஜனாதிபதி இணக்கம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy