Sangathy
News

மற்றுமொரு நுண்ணுயிர் கொல்லி மருந்திற்கு தற்காலிக தடை

Colombo (News 1st) Co-amoxiclav எனப்படும் நுண்ணுயிர் கொல்லி மருந்தின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர், குறித்த நுண்ணுயிர் கொல்லி மருந்து செலுத்தியதை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வெட்டுக் காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக வரக்காபொலயிலிருந்து வந்த 50 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த 21000 தடுப்பூசிகளை கொண்ட மருந்து தொகுதியிலிருந்து 18000 தடுப்பூசிகள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் ஒரு தடுப்பூசி தொடர்பில் மாத்திரமே இந்நிலை பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மூலமாகவும் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.

Related posts

அடம்பன் இரட்டை கொலை; இருவர் கைது

John David

Top US doctor Fauci cautiously optimistic on having Covid vaccine by early 2021

Lincoln

காலி முகத்திடலில் தங்கியுள்ள யாசகர்களை ஹம்பாந்தோட்டைக்கு அழைத்துச் செல்ல திட்டம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy