Colombo (News 1st) கொழும்பின் சில பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளைக் கருத்திற்கொண்டு, கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை நண்பகல் 12 மணி வரை மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்து மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment.