அமரர் சுப்பிரமணியம் கனகரத்தினம்
(ராசா)
மறைவு – 27 SEP 2013
அளவெட்டி, Sri Lanka (பிறந்த இடம்) தொண்டைமானாறு, Sri Lanka
அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், தொண்டமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் கனகரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாண்டுகள் கடந்து விட்டதா
நம்பவே முடியவில்லை அப்பா!
ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள்
நினைவுகள் நீங்காது…
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே அப்பா!
சத்தம் இல்லாமல் சித்தம்
துடிக்க வைத்து மொத்தமாய்
எங்களை மோசம் செய்ததென்ன?
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச்
சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்…!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்