Sangathy
News

மாத்தறை கிரீட் உப மின் நிலையம் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம் – அமைச்சர் கஞ்சன

Colombo (News 1st) பலத்த மழை காரணமாக நீர்மட்டம் உயர்வடைவதால் மாத்தறை மின்சார சபையின் கிரீட் உப மின் நிலையம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக மின்சக்தி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தேவையேற்படின், பாதுகாப்பு நடவடிக்கையாக மாத்தறை கிரீட் உப மின் நிலையத்தை பாதுகாப்பாக மூடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தெனியாய மற்றும் பெலியத்த உப மின் நிலையங்களின் ஊடாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்க, மின்சார சபை திட்டமிட்டுள்ளதாகவும் உப நிலையங்கள் மூடப்பட்டதன் பின்னர் அங்கு பணிபுரியும் மின்சார சபை ஊழியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக கடற்படையினரால் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரின் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

Related posts

Waruna to make his swan song today

Lincoln

Lasantha’s biography penned by his ex-wife launched on Monday

Lincoln

ஓட்ஸ் நல்லதுதான்… : ஆனா அதிகமா சாப்பிட்டா என்னென்ன பக்க விளைவுகள் வரும்..?

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy