Sangathy
News

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை

Colombo (News 1st) இம்முறை உலகக்கிண்ண தொடரில் முதல் வெற்றியை இலங்கை அணி இன்று பதிவு செய்தது.

நெதர்லாந்து அணிக்கு  எதிரான இன்றைய போட்டியில் 5 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.

லக்னோவில் நடைபெற்ற போட்டியில் நாணய  சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின்  முதல் 3 விக்கெட்களும் 54 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

3 விக்கெட்களையும் கசுன் ராஜித  வீழ்த்தியிருந்தார்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த Sybrand Engelbrecht, Logan van Beek ஆகியோர் 7 ஆவது விக்கெட்டுக்காக 130 ஓட்டங்களைப் பெற்றனர்.

நெதர்லாந்து  அணி சார்பில் Sybrand Engelbrecht 70 ஓட்டங்களை பெற்றதுடன், Logan van Beek  59 ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க , கசுன் ராஜித ஆகியோர் தலா 4 விக்கெட்களை கைப்பற்றினர்.

263 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 48 . 2 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கினை அடைந்தனர்.

இலங்கை சார்பில்  சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்திய சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 91 ஒட்டங்களை பெற்றார்.

பெத்தும் நிஸங்க 54 ஓட்டங்களை பெற்றதுடன், சரித் அசலங்க 44 ஓட்டங்களை பெற்றார்.

இந்த போட்டியில் இலங்கை பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலம் 2023 உலகக்கிண்ண தொடரில் இலங்கை தனது முதல் வெற்றியை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

Taliban ban women from Afghan universities

Lincoln

‘People’s Bank continues to maintain steadfast performance’

Lincoln

IMF கடன் தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை: மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy