Sangathy
News

இராணுவ விநியோக மையமாக இலங்கையை சீனா பயன்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா அவதானம்

Colombo (News 1st) சீனா அதன் இராணுவ விநியோக மையமாக இலங்கையை பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் அந்நாட்டு காங்கிரசுக்கு அனுப்பியுள்ள வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீனாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளை சீனா அதன் உலக இராணுவ விநியோக மையங்களாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா அதன் வெளிநாட்டு விநியோகங்கள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் இராணுவ பலத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உலகளாவிய இராணுவ நடவடிக்கைகளுக்கு இது இடையூறாக அமையலாமெனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Djibouti நாட்டை முப்படைகளுக்குமான இராணுவ விநியோக வசதிகளை வழங்கும் மையமாக மாற்றுவதற்கும் சீனா திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்போடியாவின் Ream கடற்படைத் தளத்தின் ஒரு பகுதியை அணுகுவதற்கான இயலுமை சீனாவிற்கு கிடைத்துள்ளமை 2022 இல் உறுதி செய்யப்பட்டதாகவும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இறக்குமதி மருந்துகளை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க விசேட குழு

John David

டிப்போக்களுக்கு அருகில் ஆபத்து ஏற்படும் வகையிலுள்ள மரங்களை அகற்றுமாறு பணிப்புரை – இலங்கை போக்குவரத்து சபை

Lincoln

Baglay reiterates India’s commitment in line with ‘Neighbourhood First Polic

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy