Sangathy
News

சமூக செயற்பாட்டாளர் டானிஷ் அலி பிணையில் விடுவிப்பு

Colombo (News 1st) நேற்று (27) இரவு கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் டானிஷ் அலி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

டானிஷ் அலி மீதான வழக்கு அடுத்த மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனிடையே, எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர் குழுவின் ஏற்பாட்டாளர் நவீன் தாரக்க உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

கல்வியை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக கொழும்பு புதிய நகர மண்டபத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

புதுக்கடை 07 ஆம் இலக்க நீதிமன்றத்தினால், தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  

Related posts

நடத்துனர்கள் இன்றி அதிவேக வீதியில் இன்று(19) முதல் பஸ் போக்குவரத்து

Lincoln

CB eases monetary conditions by reducing its interest rates

Lincoln

காசா வைத்தியசாலை தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy