Sangathy
News

ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

Colombo (News 1st) இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை உயரிய வகையில் பாதுகாத்து, சிறந்த ஊடகத்துறையை உறுதிப்படுத்தும் நோக்கில், இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலி/ஔிப்பரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்க வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தை தயாரிக்கும் போது கவனம் செலுத்த வேண்டிய கொள்கை ரீதியான விடயங்கள் பற்றி பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று உருவாக்கப்பட்டது. 

குறித்த குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள ஒலி/ஔிபரப்பு ஆணைக்குழு சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அடிப்படையாகக் கொள்வதற்காக பொருத்தமான ஏற்பாடுகளுடன் கூடிய அடிப்படை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆரம்ப வரைபின் அடிப்படையில், சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி அனுமதி

John David

Thatcher’s Flagship Privatisation Programme disintegrates

Lincoln

Justice Minister says English remains medium of instruction at Law College

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy