Sangathy
News

மின்னல் தாக்கம் தொடர்பில் 5 மாகாணங்களுக்கு எச்சரிக்கை

Colombo (News 1st) அதிக மழையுடனான வானிலையால் 798 குடும்பங்களை சேர்ந்த 2,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

9 மாகாணங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, கம்பஹா, மாத்தறை கேகாலை இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிக மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பலத்த மழையால் 3 வீடுகள் முழுமையாகவும் 116 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

11 பாதுகாப்பு முகாம்களில் 639 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் 5 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related posts

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பிணையில் விடுவிப்பு

Lincoln

JVP plans protest in Colombo tomorrow

Lincoln

Committee on Public Finance meets under the chairmanship of Hon. Mayantha Dissanayake

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy