Sangathy
News

வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி கட்டார் பயணம்

Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று (09) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கட்டாருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

டோஹா மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

டோஹா மன்ற மாநாடானது (Doha Forum) கட்டார் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச களம் ஆகும்.

சர்வதேசம் முகங்கொடுக்கும் தீர்மானமிக்க சவால்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து செயற்பாட்டு திட்டங்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இந்த பயணத்தில் வௌிவிவகார அமைச்சர், கட்டார் பிரதமருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

Related posts

Lanka debt talks with India, China, Japan helped by investment projects: President

Lincoln

Malnutrition to rise due to increased poverty and high food prices

Lincoln

இலங்கைக்கு அருகில் நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை இல்லை!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy