Sangathy
IndiaNews

தேர்தலில் நிற்பது குறித்து முடிவு எடுக்கவில்லை – டி.டி.வி.தினகரன்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியில் இன்று (16) நடைபெற்ற 10 மாவட்டங்களிலுள்ள அமமுக சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வருகிற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும்.

தஞ்சாவூர் தொகுதியில் நான் போட்டியிட இருப்பதாக கூறுவது ஊக அடிப்படையிலான தகவல். நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது சரியான நடவடிக்கை அல்ல. இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

சென்னை பேரிடர் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. காவிரி என்பது தமிழ்நாட்டுக்கு ஜீவாதார பிரச்சனை. மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். இது சட்டத்துக்கு புறம்பானது” என்றார் .

Related posts

Sabry questions insistence of interested parties to cremate bodies of Covid-19 victims

Lincoln

President requests the opposition to support the implementation of the IMF agreement

Lincoln

Farmers advised against using toxic pesticides as they also kill Sena caterpillar’s predators

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy