Sangathy
News

அனர்த்த நிலைமையினால் உயர்தர பரீட்சை மத்திய நிலையமொன்றை மாற்ற நடவடிக்கை

Colombo (News 1st) கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம்(04) ஆரம்பமாகவுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை மற்றும் வௌ்ள நிலைமை காரணமாக கெக்கிராவ மடாட்டுகம ரேவத வித்தியாலயத்திற்கான பரீட்சை மத்திய நிலையத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பாடசாலையில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்காக கல்கிரியாகம மத்திய மகா வித்தியாலயத்தில் புதிய பரீட்சை மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக முதல் முறையாக கொரிய மொழி பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அதனை தரவிறக்கம் செய்ய முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு 346,976 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். 

இவர்களில் 281,445 பேர் பாடசாலை மாணவர்கள் என்பதுடன், 65531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

Related posts

Two dead 26 injured as bus goes down precipices in Norton Bridge

Lincoln

Sniper arrested for involvement in plot to spring free Harak Kata from CID Hqrs

John David

4 பிரதான துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக கோபால் பாக்லே தெரிவிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy